நீரிழிவு என்றால் என்ன?

நீரிழிவு என்பது சதையியினால் இனி இன்சுலின் தயாரிக்க முடியாதபோது, அல்லது அது உருவாக்கும் இன்சுலினை உடலால் நன்கு பயன்படுத்த முடியாதபோது ஏற்படும் ஒரு நாள்பட்ட நோய்(chronic disease) ஆகும்.

db

இன்சுலின் என்பது சதையியினால் உருவாக்கப்பட்ட ஒரு ஹார்மோன் ஆகும், அது உடலுக்கு தேவையான சக்தியை பிரப்பிப்பதற்கு நாம் உண்ணும் உணவிலுள்ள அனைத்து காபோவைதரேற்றை குலுக்கோசாக மாற்றும் வல்லமை கொண்டது.இன்சுலின் உடல் கலங்களுக்குள் குலுக்கோச் செல்ல உதவி புரியும்.

FITTER | HAPPIER: Type-1 Diabetes in Children « RTRFM / The Sound  Alternative

இன்சுலின் உற்பத்தி செய்யவோ அல்லது திறம்பட பயன்படுத்தவோ முடியாமல் போவதால் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு உயரும். (,இது ஹைப்பர் கிளைசீமியா என அழைக்கப்படுகிறது). நீண்ட கால உயர் குளுக்கோஸ் அளவுகள் உடலுக்கு சேதம் மற்றும் பல்வேறு உறுப்புகள் மற்றும் திசுக்களின் செயலிழப்புக்கு காரணமாய் அமைகின்றது.

நாம் உண்ணும் உணவு வாய் வழியாக களத்தினூடாக இரப்பையை அடைகின்றது.இரப்பையில் அமைலேசு காபோவைதரேற்றை குலுக்கோசாக மாற்றுகின்றது.அதன் பின் சடைமுளைகள் குலுக்கோசை உடல் கலங்களுக்குள் செல்ல உதவுகிறது.அதன் பின் இரத்தத்தில் காணப்படும் மேலதிக குலுக்கோசு தசையில் கிளைக்கோஐனாகவும் தோலில் கொழுப்பாகவும் சேமுத்து வைக்கும்.

இப்போது நீரிழிவு பற்றி பேசுவதாயின் மேற்கூறப்பட்ட செயன்முறையில் சதையி முறையாக இன்சுலினை சுறக்க வில்லையாயின் குருதியில் காணப்படும் மேலதிக குலுக்கோசு அப்படியே இருப்பதே நீரிழிவு எனப்படும்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *